Thursday, July 31, 2025

உலக நாடுகளை நடுங்க வைக்கும் 37 வயது இளம் அதிபர் – நாடே பாதுகாப்பு..! LIVE FIRE இப்ராஹிம் டிராரே !”

என்றாவது யோசித்திருக்கீர்களா? ஏன் உலகிலேயே அதிக கனிம வளங்கள் கொண்ட ஆப்பிரிக்கா, இன்னும் வறுமையால் வாடுகிறது? என்று,….

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று தான் புர்கினா பாசோ.அந்த நாட்டு மக்களின் வளம், வெளிநாட்டு ஆதிக்க நாடுகளின் கையில் தான் இருந்தது. அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள், அந்த தேசத்தின் தங்கத்தையும், கனிமங்களையும், பசுமையையும் எடுத்துச் செல்கின்றன. ஆனால் அதன் பயன்… அந்நாட்டு மக்களுக்கு இல்லை. கிடைப்பது வெறும் எச்சம்தான்.

இதை எதிர்த்து, மக்கள் பாதுகாப்பாய் கண்ணும் கருத்துமாய் நடத்தும் ஒரு இளைஞன் இப்போது அங்கு தலைவராக வந்திருக்கிறார்.அவரது பெயர் – இப்ராஹிம் டிராரே. வயது 37. புர்கினா பாசோவில் ராணுவ கேப்டனாக இருந்தவர். இன்று, அதிபராகி, புரட்சிகர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

இவர் பின்பற்றும் வழி தாமஸ் சங்கராவின் வழி. 33 வயதில் அதிபராகி, மக்கள் நலத்திற்காக குரல் கொடுத்தவர் தான் தாமஸ் சங்கரா. ஆனால் 1987-ல், அதே மாளிகையில் அவரை சுட்டுக் கொன்றனர். காரணம் – அவர் ஆதிக்கத்தை எதிர்த்ததுதான்.

இன்று, அந்த நெறியில் டிராரே நடக்கிறார். அதிபரான உடனேயே அந்நாட்டு கனிம வளங்களை நாட்டுடமையாக்கினார். அரசுக்கு சொந்தமான சுரங்கங்களை உருவாக்கினார். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு புதிய விதிகளை கட்டாயமாக்கினார் – குறைந்தது 15% பங்குகள் அரசுக்கு வழங்கவேண்டும். மேற்கத்திய ஆய்வு உரிமைகளையும் ரத்து செய்தார்.

அவர் பேசும் வார்த்தைகள்… ஒவ்வொன்றும் வல்லரசு நாடுகளையே மிரள வைத்திருக்கிறது…அவர் கூறுவது என்னவென்றால் “எப்பொழுதும் ஆதிக்க நாடுகளின் கை பொம்மையாகி விடாதீர்கள்” என்று ஆப்பிரிக்க தலைவர்களுக்கு கடுமையாகச் சொல்கிறார்.

பெண்களுக்கு சம உரிமை, எல்லோருக்கும் வீடு, கல்வி, மருத்துவம், விவசாயிகளுக்கான இலவச டிராக்டர்கள், கூட்டு பண்ணைகள்… இவை அனைத்தும் குறுகிய காலத்திலேயே செயல்படுத்தப் பட்டிருக்கின்றன.

மேற்கத்திய எதிர்ப்புகளுக்கு மத்தியில், இப்ராஹிம் டிராரே, ரஷ்ய அதிபர் புட்டினை சந்தித்து, ராணுவ உதவி எதுவும் கேட்கவில்லை …மாறாக தன் மக்களுக்காக கல்வி உதவி கேட்டார். பல்கலைக்கழகங்கள் நிறுவ வேண்டும், அறிவில் முன்னேற வேண்டும் என்றும் கேட்டுள்ளார். ரஷ்யாவும் இப்போது அந்த கோரிக்கையை ஏற்றிருக்கிறது.

இப்போது வல்லரசுகளை சிதற விடும் இப்ராஹிம் டிராரே தான் இப்போது முன்னுதாரணமாக இருந்து வருகிறார்….

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News