ஒடிசா ரயில் விபத்தின் டைம் லைன் ரயில்வே துறையினர் இடையே பெரிய குழப்பம் ஏற்பட்டது. முக்கியமாக ஒரு 20 நிமிட இடைவெளி இந்த விபத்தில் பல கேள்விகளை எழுப்புகிறது.
கொல்கத்தாவில் ஏற்பட்ட ரயில் விபத்து இந்தியாவையே உலுக்கி உள்ளது. அங்கே அள்ள அள்ள உடல்களாக வந்து கொண்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.இந்திய வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்து என்று பார்க்கப்படுகிறது. பீகார் ரயில் விபத்தில் 1981ல் 800 பேர் இறந்தனர். மேலும் 1956ல் அரியலூர் ரயில் விபத்தில் 250 பேர் இறந்தனர். அதற்கு இணையான விபத்து இப்போது ஒடிசாவில் ஏற்பட்டு உள்ளது.
ரயில் கடந்த பின் சில நொடிகளில் அதை சிவப்பாக்கி உள்ளனர். அதாவது சிக்னல் கொடுத்தவர் தவறுதலாக கொடுத்துவிட்டு மாற்றி இருக்கலாம். அல்லது வேண்டுமென்றே செய்து இருக்கலாம். அல்லது தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம். சிவப்பாக விளக்கு மாறியதை கவனிக்காமல் கோரமண்டலம் முன்னோக்கி சென்றுள்ளது. அந்த பாதையில் இருந்த சரக்கு ரயிலில் கோரமண்டல் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் இரவு 7 மணிக்கு, ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதன் 10-12 பெட்டிகள் ஒடிசாவில் உள்ள பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன.
\
இந்த நேரத்தில்தான் 20 நிமிடம் கழித்து, பெங்களூர் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அருகில் இருந்த தடத்தில் வந்துள்ளது. அந்த தடத்தில் இருந்த தடம் புரண்ட பெட்டிகள் மீது பெங்களூர் ரயில் மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் முதலில் கோரமண்டல் ரயிலுக்கு பச்சை கொடுத்து பின் சிவப்பு மாற்றியதை கூட தவறு என்று சொல்லலாம்.. ஆனால் அதன்பின் ரயில் தடம் புரண்டு 20 நிமிடம் கழித்து கூட எதிரே வந்த பெங்களூருக்கு ரயிலுக்கு ஏன் தகவல் தரப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த 20 நிமிடம்தான் இந்தியாவையே உலுக்கி உள்ளது.