2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தற்போதே முன்னணி அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த தேர்தல் களத்தில் முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகமும் இணைந்துள்ளது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் மதுரையில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அவரது கட்சி தொண்டர்கள் கூறி வரும் நிலையில் அங்கு ஓட்ட பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் மதுரை மேற்கு தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் “நடிகர் விஜய்யை 1.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்து முதலமைச்சர் ஆக்கியதற்கு நன்றி” என கூறப்பட்டுள்ளது.