Friday, August 15, 2025
HTML tutorial

தஞ்சையில் பத்து ரூபாய் டாக்டர் மறைவு : ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ரத்தினம் பிள்ளை (96). இப்பகுதியில் பத்து ரூபாய் டாக்டர் என்று அழைக்கப்பட்ட இவர் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.

மருத்துவரான காலத்திலிருந்து தன் வாழ்நாள் முழுவதும் பத்து ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு சுமார் 65 ஆயிரம் சுகப்பிரசவங்கள் பார்த்துள்ளார். ஏழை எளிய மக்களுக்கு சிறந்த மருத்துவம் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்தது மட்டுமல்லாமல் ஏழை எளியவர்களிடம் மனிதநேயத்துடன் நடந்து கொண்டதால் மனிதநேய மருத்துவர் என்றும் அப்பகுதி மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.

இவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News