Thursday, December 26, 2024

‘உங்க டுபாக்கூர் டயலாக் சினிமாவுக்கு மட்டும் தானா?’ விஜயை வெளுத்து வாங்கிய வீரலட்சுமி

பாலியல் தொடர்பான துன்புறுத்தலுக்கு ஆளான பெண் ஒருவர் 60 சதவீத காயங்களோடு சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்தப் பெண் நடிகர் விஜய் தன்னை நேரில் சந்திக்க வேண்டும் எனவும் தனக்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வெளியிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

எனினும், விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. இந்நிலையில், தமிழக முன்னேற்ற படை தலைவர் கி.வீரலட்சுமி, பெண்ணின் கோரிக்கை அடங்கிய வீடியோ அனைத்து ஊடகங்களிலும் வெளியான பின்னரும் விஜய் கண்டுகொள்ளவில்லை என காட்டமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

Latest news