Friday, May 9, 2025

மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய்! அடுத்த குட்டி ஸ்டோரி ரெடி

டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற வாரிசு ஆடியோ லான்ச் விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மேலும் நிகழ்ச்சியில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி, பாடிய ‘ரஞ்சிதமே’ பாடல் என அனைத்துமே தொடர்ந்து ட்ரெண்ட் ஆகி வந்தது.

வாரிசு படம் தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கிலும் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆவதால் அங்கும் ஒரு pre ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக, விஜய் படக்குழுவினருடன் ஜனவரி 8ஆம் தேதி ஹைதராபாத் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கிட்டத்தட்ட ஆடியோ லான்ச் போல நடக்கும் இந்நிகழ்வில் விஜய் கலந்துகொண்டு அம்மாநில ரசிகர்களுக்காக தெலுங்கில் சில வார்த்தைகளை பேசுவார் என எதிர்ப்பார்க்கபடுகிறது.  ஜனவரி 11ஆம் தேதி வாரிசு படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news