Saturday, January 31, 2026

படம் எப்படி இருக்கும்னு  காட்டிய அந்த 5 விஷயங்கள்! ‘வாரிசு’ ட்ரைலர் Highlights

பொங்கலுக்கு வெளியாக உள்ள ‘வாரிசு’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி விறுவிறுப்பாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கடந்த வருடம் ‘பீஸ்ட்’ திரைப்படம் திருப்தியாக அமையாத நிலையில், வாரிசு படத்தை பற்றிய எதிர்பார்ப்புகள் விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சினிமா ஆர்வலர்களிடமும் அதிகரித்து வருகிறது. தற்போது வெளியான ட்ரைலரின் opening scene பெரிய கூட்டுக் குடும்ப காட்சியாக அமைந்துள்ளது.

உணர்வுபூர்வமான குடும்ப படமாக வாரிசு இருக்கும் என முன்னதாகவே படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் கூறியதை இது உறுதிப்படுத்தியுள்ளது. Intro Song கொடுத்து முறையாக படத்தில் ஹீரோ என்ட்ரி இருக்கும் என தெரிகிறது. இதனால் commercial entertainer பட formula முழுமையாக கையாளப்பட்டிருப்பதை புரிந்து கொள்ளலாம்.

விஜயின் பழைய ஸ்டைலான punch dialogues மீட்டெடுக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் மாஸ் ஸ்டண்ட் காட்சிகளுக்கு குறை வைக்காமல் படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

யதார்த்தமாக சேர்க்கப்பட்டுள்ள ‘பூவே உனக்காக’ பட reference அனைவரையும் புன்னகைக்க வைக்கும் என்பதில் ஆச்சர்யமில்லை. விஜய் பிரகாஷ்ராஜ் combo, விஜய் ராஷ்மிக்கா chemistry என பழைய ஸ்டைல் மற்றும் புது ட்ரெண்டை இணைத்துள்ள ‘வாரிசு’ படம் ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News