இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ என்ற புதிய திரைப்படத்தில் ஜீவா நடித்துள்ளார். இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, பிரார்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ராவண கோட்டம்’ படத்தை தயாரித்த கண்ணன் ரவி, இந்த படத்தையும் தயாரித்துள்ளார்.
அரசியல் கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, படத்தின் வெளியீட்டு தேதி எப்போது அறிவிக்கப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் வருகிற 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
