நிதீஷ் சகாதேவ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம், பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், குடும்பங்கள் கொண்டாடும் நகைச்சுவை மற்றும் எமோஷனல் கலந்த திரைக்கதையால் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.
படம் வெளியாகி இரண்டு வாரங்களை நெருங்கும் நிலையில், உலக அளவில் சுமார் ரூ. 34 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ. 18 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி, விநியோகஸ்தர்களுக்குப் பெரும் லாபத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
