சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா சரத்குமார் நடித்துள்ள புதிய திரைப்படம் தாய் கிழவி. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநரான சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகிய நிலையில், ரசிகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், படத்தை பார்த்த பல்வேறு பிரபலங்களும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே நாடு முழுவதும் ரூபாய் 2 கோடியே 50 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பு செலவு சுமார் ரூபாய் 10 கோடி இருக்கும் என கூறப்படுகின்றது. முதல் நாளிலேயே இரண்டரை கோடி ரூபாய் வசூல் குவித்திருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
