டெஸ்லா சந்தை மதிப்பு ரூ.13 லட்சம் கோடி சரிவு

கடந்த 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்ட எலான் மஸ்க், அக்கட்சிக்கான மிகப்பெரிய நன்கொடையாளராகவும் இருந்தார். அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை என்ற துறையை உருவாக்கி, அதன் தலைவராக மஸ்க் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து கடந்த மாதம் அந்த பொறுப்பில் இருந்து விலகினார். இந்நிலையில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 13.14 லட்சம் கோடி ரூபாய் சரிந்துள்ளது. டிரம்ப் உடனான மோதலை அடுத்து எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் விலை 14 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

Related News

Latest News