Wednesday, December 17, 2025

பாலிவுட்டிலும் வசூலில் கலக்கிய தனுஷின் ‘தேரே இஷ்க் மே’

நடிகர் தனுஷ் – இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த படம் தேரே இஷ்க் மே. இப்படத்தில் க்ரித்தி சனோன் கதாநாயகியாக நடித்திருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தேரே இஷ்க் மே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிலர் கலவையான விமர்சனங்களையும் முன் வைத்தனர்.

இந்நிலையில், தேரே இஷ்க் மே திரைப்படம் உலகளவில் ரூ. 152 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராயன் படத்திற்கு பின் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்த தனுஷ் படம் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News