கேரள மாநிலம் வட்சாலம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் மர்மநபர்கள் உரலை வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதனை கொச்சுவேளி எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர் கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்ட நிலையில், ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த உரல் அகற்றப்பட்டது.
உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும், தண்டவாளத்தில் உரலை வைத்தது யார்? என ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
