Sunday, December 28, 2025

தலைமுடி தழைத்து வளர பயன்படுத்த வேண்டிய பத்து எண்ணெய்கள்!

தலைமுடி செழித்து ஆரோக்கியமாக, அடர்த்தியாக, நீளமாக வளர வேண்டும் என அனைவரும் விரும்பினால் கூட அது பலருக்கும் அவ்வளவு எளிதில் சாத்தியமாவதில்லை.

பல தலைமுடி பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும் பத்து எண்ணெய்களை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

ஆலிவ் எண்ணெய்யை hair mask போல பயன்படுத்தினால் குளிர்காலத்தில் வறண்டு போகும் தலைமுடி ஊட்டம் பெறும். விட்டமின் E மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்த தேங்காய் எண்ணெய், தலைமுடி உதிர்வை தடுத்து தலை சருமத்தில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகளிடம் இருந்து பாதுகாக்கிறது. பொட்டாசியம், sulphur நிறைந்துள்ள வெங்காய எண்ணெய் தலைமுடி வெடிப்புகளை தடுக்கிறது.

ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அடங்கிய வேப்பெண்ணெய் தலைமுடிக்கு வலுசேர்ப்பதோடு பேன் மற்றும் பொடுகு தொல்லையில் இருந்தும் விடுபட உதவுகிறது. சிங்க், பீட்டா கரோடின் மற்றும் செலனியம் உள்ள கடுகு எண்ணெய் தலைமுடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ், E மற்றும் C விட்டமின்கள் உள்ள நெல்லிக்காய் எண்ணெய் தலைச்சருமத்தின் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைமுடி சிறப்பாக வளர துணை புரிகிறது.

ஒமேகா fatty acids கொண்டுள்ள விளக்கெண்ணெய் தலைமுடியில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டது. இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், விட்டமின் D மற்றும் E நிறைந்த பிரிங்கராஜ் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கிறது. மேலும் தலைமுடியை பளபளப்பாக்க பாதாம் எண்ணெய், அடர்த்தியாக்க எள்ளெண்ணெய், மினுமினுப்பான தோற்றம் மற்றும் அமைதியான உணர்வை அளிக்க அவோகேடோ எண்ணெய் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News