தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 104 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வரும் 18ம் தேதி வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் அதிகட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.