பிரபல தெலுங்கு யூடியூபர் கோமளி(21) தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணையில் காதல் பிரச்சனையே இந்த துயர சம்பவத்திற்கான காரணம் என கூறப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக மற்றொரு யூடியூபர் ஒருவரை அவர் காதலித்து வந்ததாகவும், கருத்து வேறுபாடு காரணமாக ஒரு ஆண்டுக்கு முன்பு இருவரும் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோமளி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோமளியின் மரணம் அவரது குடும்பத்தினரையும் நண்பர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
