பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ‘கௌரி’ சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவந்த நடிகை நந்தினி, பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தொலைக்காட்சி மற்றும் சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘கௌரி’ சீரியலில் துர்கா – கனகா என இரட்டை வேடங்களில் நடித்த நந்தினி, தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களிடையே கவனம் பெற்றிருந்தார். இந்நிலையில் பெங்களூருவில் நடிகை நந்தினி நேற்று தற்கொலை செய்துகொண்டார். இதனை சீரியல் குழுவும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
இதுவரை தற்கொலைக்கான காரணம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
