Tuesday, December 30, 2025

பாம்புக்கு முத்தமிடும் இளம்பெண்

பாம்புக்கு முத்தமிடும் இளம்பெண்ணின் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஓர் அழகிய இளம்பெண் தன்னுடைய உடம்பில் போர்வைபோல நீண்ட பாம்பு ஒன்றைச் சுற்றியிருக்கிறார்.
அப்போது அந்தப் பாம்பு இளம்பெண்ணை முத்தமிடுவதுபோல நாவால் தீண்டுகிறது. பதிலுக்கு இளம்பெண்ணும் அரவணைத்துப் பாம்பின் கழுத்துப் பகுதியில் மென்மையாக முத்தமிடுகிறார்.

சிறிதளவும் பயமும் தயக்கமும் இன்றி புன்னகை தவழ பாம்புக்கு அவர் முத்தமிடும் செயல் ரசிக்க வைத்தாலும், காண்போரைப் பதறவைக்கிறது. எதற்காக இப்படிச்செய்கிறார் என்பதை அப்பெண் குறிப்பிடவில்லை.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அது தெரிந்ததுதான். ஆனால், தன் சொந்தக் குழந்தையைக் கொஞ்சுவதுபோல் நடந்துகொண்டது தன் தைரியத்தைக் காண்பிப்பதற்காகவா அல்லது வலைத்தளவாசிகளின் கவனத்தை ஈர்த்து புகழ்பெறுவதற்காகவா என்பது தெரியாமல் பலர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related News

Latest News