Wednesday, March 12, 2025

கல்லூரியில் மாணவிக்கு நடந்த சம்பவம்

ஒவ்வொருவரின் வாழ்வில் , தன் குடும்பம் தன் சாதனைகளால் பெருமைப்பட வேண்டும் என்பதே அனைவரின் கனவாகும். இந்த உணர்ச்சிகரமான தருணங்கள், பதிவு செய்யப்பட்டால், வாழ்க்கையில் சில இனிமையான நினைவுகளாக இருக்கும்.

இன்ஸ்டாகிராமில் இது போன்ற வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. பார்ப்பவர்களை உணர்ச்சிவசப்பட செய்யும் இந்த வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

வீடியோவில், இளம் பெண் ஒருவர் தன் குடும்பத்துடன் முகத்தில் மிகிந்த ஒரு எதிர்பார்ப்பு , ஒரு பதற்றத்துடன் கணினி முன் உட்காந்து கவனத்துக்கொண்டு உள்ளார் . காரணம், அந்த பெண் குறிப்பிட்ட ஒரு கல்லூரியில் சேருவதற்காக மற்றும் கல்லூரி மாணவர் உதவித்தொகைகும் விண்ணப்பித்திருந்தார்.

https://www.instagram.com/p/Cbsi3v3Dpq8/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

அந்த பெணின் முழு குடும்பமும் அவளுக்குப் பின்னால் ஆர்வத்துடன் காத்திருந்தது. சிறிது நேர காத்திருப்புக்கு பிறகு , அவரின் விண்ணப்பத்தை அக்கல்லூரி ஏற்றுக்கொன்றது. இதனை பாத்துக்கொண்டு இருக்கும் அவரின் குடும்பம் கண்ணீருடன் உற்சாகத்தில் அனைவரும் கட்டி அணைத்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர் .

“எனது சிறிய சகோதரி வெகுதூரம் செல்வார் என்று எனக்கு தெரியும், நான் அவளைப் பற்றி பெருமைப்படுகிறேன் ! ,கல்லூரியில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு கூடுதலாக, அவர் கல்வி மற்றும் தகுதிக்கான உதவித்தொகைகளைப் பெற்றுள்ளார். இதற்கு அவளின் கடின உழைப்பும் முயற்சியுமே காரணம் , எனது வாழ்த்துகள்.” என உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகளால் வாழ்த்து தெரிவித்து இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுஉள்ளது .

Latest news