தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புளியங்குடியில் பிரான்சிஸ் (வயது 35) என்பவர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் 10-ம் வகுப்பு மாணவனுக்கு ஆசிரியர் பிரான்சிஸ் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் வந்து விசாரித்த போது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் புளியங்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.