Tuesday, July 29, 2025

பணிநீக்கத்தின் விளைவு : 15 நிமிடத்தில் TCS க்கு விழுந்த பெரிய அடி

ரத்தன் டாடாவின் டிசிஎஸ்… இந்தியாவின் பெருமை… இன்று சரிந்திருக்கிறது! முதலீட்டாளர்களின் பணம்… வெறும் 15 நிமிடங்களில் 6,550 கோடி ரூபாய் காலி! ஒரே நாளில் ஏற்பட்ட மொத்த நஷ்டம் 26,550 கோடி!

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சாம்ராஜ்யம் இப்படி ஆட்டம் காணக் காரணம் என்ன? 12,000 ஊழியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய அந்த ஒற்றை அறிவிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்!

டிசிஎஸ் நிறுவனம் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுத்திருக்கிறது. நடுத்தர மற்றும் உயர் பதவிகளில் இருக்கும் சுமார் 12,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நொடியே, பங்குச்சந்தையில் டிசிஎஸ் பங்குகள் தலைகீழாகச் சரிந்தன. முதலீட்டாளர்கள் அலறியடித்து பங்குகளை விற்க, நிறுவனத்தின் மதிப்பு பல்லாயிரம் கோடிகள் சரிந்தது.

வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு என்ன கிடைக்கும்? நிறுவனம் சொல்கிறது, என்றால் “பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு முழு சம்பளம், கூடுதல் சலுகைகள், இன்சூரன்ஸ், மற்றும் வேறு வேலை தேட உதவியும் செய்வோம்” என்று கூறுகிறது. ஆனால், கதை இத்துடன் முடியவில்லை. வேலையில் இருக்கும் மற்ற ஊழியர்களின் தூக்கத்தைக் கெடுக்க, டிசிஎஸ் ஒரு புதிய விதியைக் கொண்டு வந்திருக்கிறது. அதன் பெயர், பெஞ்ச் பாலிசி.

இது என்ன சொல்கிறது?

இனி, ஒரு ஐடி ஊழியர், எந்த ப்ராஜெக்ட்டிலும் இல்லாமல், ஒரு வருடத்தில் வெறும் 35 நாட்கள் மட்டுமே ‘பெஞ்ச்’-ல் இருக்க முடியும். அந்த 35 நாட்களுக்குள் புதிய ப்ராஜெக்ட் கிடைக்காவிட்டால், அவர்களுடைய செயல்திறன் கடுமையாக மதிப்பாய்வு செய்யப்படும். இந்த புதிய விதிக்கு எதிராக, ஊழியர்கள் சட்டப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள்.

இது வெறும் டிசிஎஸ்-இன் பிரச்சினை மட்டும் அல்ல… ஒட்டுமொத்த இந்திய ஐடி துறையுமே ஒரு மந்தநிலையைச் சந்தித்து வருகிறது. இந்தியாவின் டாப் 6 ஐடி நிறுவனங்களின் ஆள் எடுப்பு, கடந்த காலாண்டில் 72% குறைந்திருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News