2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பாஜக 3வது முறையாக ஆட்சியமைத்தபின் தாக்கல் செய்யப்படும் 2வது பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட்டில் கவனிக்க வைத்த முக்கிய விஷயங்கள்
பட்டியலின பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ரூ.2 கோடி கடனுதவி வழங்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
2047க்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் அணு மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் 40 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும்.
36 வகையான உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.