Sunday, April 20, 2025

டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் : சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

தென்மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. நடப்பு ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்த விதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் காலை முதல் கால வரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

Latest news