தமிழகத்திற்கு மழைநீரை வாரிக்கொடுக்கும் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது.
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்க்கப்போகிறது என தமிழக வனிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் 1913 என்ற உதவி எண்ணை அறிவித்துள்ளது தமிழக அரசு.
சென்னை மாநகராட்சியில் உள்ள வெள்ளத்தடுப்பு கட்டுப்பாட்டு அறையை 044-25619206, 044-25619207 மற்றும் 044-25619208 என்ற எண்களின் மூலம் தொலைபேசி வழியாக பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் மூலமாகவும், மாநகராட்சியின் ‘நம்ம சென்னை செயலி’ ஆப்கள் மூலமாகவும் புகார் அளிக்கலாம் என கூறியுள்ள அரசு அதிகாரிகள், அடுத்த 5 நாட்களுக்கு புணரமைக்கும் பணிகள் வேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.