Saturday, August 2, 2025
HTML tutorial

தலைநகரிலேயே தாமரை மலரும் போது தமிழகத்திலும் மலரும் – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இதனை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது : “தலைநகரிலேயே தாமரை மலரும் போது தமிழகத்திலும் மலரும். 2026ல் தமிழகத்தில் தாமரை மலருவதை நாங்கள் கொண்டாடுவோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது. ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவால் ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்றார். இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு திமுக கவலைப்பட வேண்டும்” என அவர் பேசியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News