Sunday, April 20, 2025

அதிமுக – பாஜக கூட்டணியால் மு.க ஸ்டாலினுக்கு பதற்றம் – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், 2026-லும் திராவிட மாடல் ஆட்சிதான்! தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்! என்று கூறினார்.

இந்நிலையில் பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:- அதிமுக- பாஜக கூட்டணி அமைந்த பிறகு முதலமைச்சராக ஸ்டாலின் பதற்றத்துடன் இருந்து வருகிறார். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்தீர்கள். டெல்லிக்கு அடி பணிந்து கொண்டு, மாநில சுயாட்சியைப் பற்றியும் பேசாமல் இருந்தீர்கள் என அவர் பேசியுள்ளார்.

Latest news