நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த அக்கட்சியினர் கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த சீமான், பெரியாரை ஏற்றுக்கொள்ளும் தம்பிகள் கட்சியை விட்டு விலகி செல்லுங்கள் என அறிவித்தார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த கோ.தமிழரசனும் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சங்கி என்றால் செருப்பால அடிப்பேன் என்று செருப்பை காட்டிவிட்டு, நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்த பிறகு, “சங்கி” என்றால் சகத் தோழன் என்று சொல்கிறீர்கள்.
‘மதவாத அரசியலை எதிர்ப்பதாக கூறுகின்ற தாங்கள் பாஜக மனித குலத்தின் எதிரி என்று சொல்லிவிட்டு, தற்போது அந்த அமைப்பில் இருக்கிற எச்.ராஜா அவர்களை பேரறிஞர் என்று சொல்கிறீர்கள். மேலும் கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறீர்கள். இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதை எப்படி ஏற்பது? எனவே தற்போது நாம் தமிழர் கட்சியில் வகித்து வரும். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும். விலகுகிறேன்” என அவர் கூறியுள்ளார்.