Wednesday, February 5, 2025

500 தாழ்தள மின்சார பேருந்துகள் வாங்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை டெண்டர்

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் வாங்கப்பட்ட 25 தாழ்தள பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்காக கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சார பேருந்துகள் வாங்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை டெண்டர் கோரியுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாதது, குளிர்சாதன வசதி உள்ளது என்று இரு வகையாக பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் 500 மின்சார தாழ்தள பேருந்துகளை இயக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில், கோவை, மதுரை நகரங்களிலும் மின்சார பேருந்துகளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

Latest news