தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஆகஸ்ட் ) இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
அடுத்த மாதம் முதல் 2 வாரங்களில் வடகடலோரம், வடக்கு உள் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பதிவாகக் கூடும் என கணித்துள்ளனர்.
இதேபோல், 18-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட இயல்பை விட அதிக மழை இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.