Sunday, May 11, 2025

இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் – ஆர்பிஐ

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக ஏடிஎம்கள் உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஏடிஎம் என்பது ஒரு மின்னணு வங்கி சாதனமாகும். இது ஒரு வாடிக்கையாளர், வங்கி ஊழியரின் உதவியின்றி அடிப்படை பரிமாற்றங்களை செய்ய உதவுகின்றது.

பணம் செலுத்துவது , பணம் பெற்றுக்கொள்வது , கணக்கை பார்ப்பது போன்ற சில பணிகளை வாடிக்கையாளரே செய்ய ஏதுவாக கணினி மயமாக்கப்பட்ட ஒரு இயந்திரமாக ஏடிஎம் நமக்கு பெரிதும் உதவியாக உள்ளது.

இதற்கு முன் , வங்கி தொடர்பான எந்த வேலை என்றாலும் நேரில் சென்று மணிக்கணக்கில் நேரத்தை செலவிட்டு சென்ற வேலையை முடித்து வந்தனர் வாடிக்கையாளர்கள், தற்போது ஏடிஎம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பணியை மேலும் எளிதாக்கி கொண்டுள்ளனர். அந்த வகையில் ஏடிஎம் என்பது நமக்கு கிடைத்தமிகப்பெரிய வரமாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டிசம்பர் 2021-ல் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக ஏடிஎம்கள் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி , தமிழகத்தில் 28,540 ஏடிஎம்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக மகாராஷ்டிராவில் 27,945 ஏடிஎம்களும், மூன்றாம் இடத்தில் உத்தரபிரதேசத்தில் 23,460 ஏடிஎம்கள் உள்ளதாக ஆர்பிஐ தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Latest news