Wednesday, December 24, 2025

தமிழக அரசின் வால்வோ சொகுசுப் பேருந்து! கட்டணம் எவ்வளவு?

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை பணிமனைக்கு கொண்டு வரப்பட்ட 20 மல்டி ஆக்சில் வால்வோ குளிர்சாதன சொகுசு பேருந்துகளின் சேவையை சென்னை தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேருந்துகள் சென்னையில் இருந்து கோவை, பெங்களூரு, திருப்பூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, மதுரை, திருச்செந்தூர், நாகர்கோவில், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படவுள்ளன.

இந்நிலையில் இந்த பேருந்துகளின் கட்டண விவரங்கள் வெளியாகி உள்ளது.

சென்னை கிளாம்பாக்கம் – திருச்செந்தூர் – ரூ. 1,115

சென்னை கிளாம்பாக்கம் – நாகர்கோவில் – ரூ. 1,215

சென்னை கிளாம்பாக்கம் – தஞ்சாவூர் – ரூ. 590

சென்னை கிளாம்பாக்கம் – திருப்பூர் – ரூ. 800

சென்னை கிளாம்பாக்கம் – சேலம் – ரூ. 575

சென்னை கிளாம்பாக்கம் – கோவை – ரூ. 880

சென்னை கிளாம்பாக்கம் – பெங்களூரு – ரூ. 695

கோவை – பெங்களூரு – ரூ. 690

சென்னை கிளாம்பாக்கம் – திருச்சி – ரூ. 565

சென்னை கிளாம்பாக்கம் – மதுரை – ரூ. 790

Related News

Latest News