தமிழக அரசு பொதுமக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு அசத்தலான சூப்பர் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. சொந்த தொழிலை துவங்கி முன்னேற உதவும் கடன் உதவி, மானிய உதவி திட்டங்கள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விவசாயிகள் மின் மோட்டார் வாங்கும் போது 50% தள்ளுபடி போன்ற பல மாதிரிகள் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.
அதுகுறித்து அடுத்த கட்டமாக 2000 ஊழியர்களுக்கு மின் இருசக்கர வாகனங்களை வாங்க ரூ.20,000 மானியம் வழங்கும் புதிய திட்டம் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு தொழிலாளருக்கு ரூ.20,000 மானியம் எனக் கணக்கிடப்பட்டு மொத்தம் ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ல வாரியத்தின் அனுமதி பெற்று விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழக அரசின் இந்த அறிவிப்பின் மூலம் பைக் இல்லாமல் சைக்களில் சென்று உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் பயனடையவுள்ளனர்.
