சத்தியம் தொலைக்காட்சி 16ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் : “தமிழ்ச் செய்தி ஊடக உலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்து பயணித்துக் கொண்டிருக்கும் சத்தியம் செய்தித் தொலைக்காட்சி வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி 16-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை அறிந்து மகிழ்கிறேன்.
செய்திகளையும், அவை சார்ந்த நிகழ்ச்சிகளையும் சமூக அக்கறையுடனும், பொறுப்புடனும், அறத்துடனும் வழங்கி வருவதில் சத்தியம் செய்தித் தொலைக்காட்சி தனக்கென்ற தெளிவான பாதையைத் தேர்வு செய்து அதன்படி நடைபோட்டு வருகிறது.
அதன் வெற்றிக்கு களத்தில் இருந்தும், செய்தி அறைக்குள் இருந்தும் அயராது பணியாற்றி வரும் அனைத்து நண்பர்களுக்கும், சத்தியம் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களது ஊடகப் பயணம் என்றென்றும் தொய்வின்றித் தொடர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!”
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.