முதல்வரின் அடுத்த அதிரடி செயல்

351
Advertisement

சென்னையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


தமிழகம் முழுவதும் கடந்த 12-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 28.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் நேற்று 20 ஆயிரம் முகாம்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமிற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

தடுப்பூசிகள் செலுத்த வரிசையில் காத்திருந்த பொதுமக்களிடம் அங்குள்ள வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.