Thursday, May 8, 2025

கூட்டணிக்கு அழைத்த தமிழக பாஜக : சீமான் கொடுத்த பதில்

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த சீமான் ”கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான். நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம்” என தெரிவித்தார்.

இது குறித்து சீமான் பேசியதாவது : ஒரு கட்சி மற்றொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான். நாங்கள் மக்கள் அரசியல் செய்கிறோம். நாங்கள் மக்களோடு சேர்ந்து தான் தேர்தலை சந்திப்போம். 5வது முறையாக தனித்து ஒரு கட்சி போட்டியிடுகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சியாக தான் இருக்கும். 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன். 117 பெண்களுக்கும், 117 ஆண்களுக்கும் வாய்ப்பு கொடுப்பேன் என அவர் கூறினார்.

Latest news