தமிழக சட்டப்பேரவை தேர்தல்… தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி, நடிகர் விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிட்டன.

இன்று காலை 9 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எந்தக் கட்சி முன்னிலை வகிக்கிறது, யார் ஆட்சியை அமைக்க வாய்ப்பு உள்ளது என்பதற்கான தெளிவு படிப்படியாக கிடைக்கும்.

இந்த நிலையில் 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தனி மேஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டு தபால் வாக்கு எண்ணிக்கை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மேஜையிலும் தலா 500 தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

Related News

Latest News