Thursday, June 12, 2025

நெகட்டிவ் விமர்சனத்தால் விரைவில் OTT யில் வெளியாகும் தக் லைஃப்?

மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 5ம் தேதி வெளியான திரைப்படம் தக் ஃலைப். இப்படத்தில் சிலம்பரசன், த்ரிஷா. அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் படம் வெளியான முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்கள் கிடைத்து வந்தது. மேலும் வசூலும் சரிய தொடங்கியுள்ளது.

தக் லைஃப் படம் வெளியாகி எட்டு வாரங்களுக்கு பின்பே ஓடிடியில் வெளியாகும் என கமல் அறிவித்திருந்தார். தங்களின் நிபந்தனைக்கு ஓடிடி தளம் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறினார். ஆனால் எதிர்மறை விமர்சனத்தால் திட்டமிட்ட தேதிக்கு முன்பாக இப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தக் லைஃப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news