Wednesday, December 24, 2025

நாகையில் த.வெ.க. விஜயின் மக்கள் சந்திப்பு- தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்,’உங்க விஜய் நான் வரேன், மக்கள் சந்திப்பு பிரசாரம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை கடந்த 13ந்தேதி முதல் தொடங்கி உள்ளார்.அவரது முதற்கட்ட சுற்றுப்பயணம் திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் இருந்து தொடங்கியது

இதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.இந்த நிலையில், விஜயின் மக்கள் சந்திப்பிற்கு வரும் தொண்டர்களுக்கு 12 வழிகாட்டு நெறிமுறைகளை விதித்து தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

அதாவது முதியவர், பள்ளி சிறுவர்கள், கர்ப்பிணி, கை்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள் விஜய் பரப்புரைக்கு வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.அடுத்ததாக, கட்டிடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின்விளக்கு கம்பங்கள், உயரமாக இடங்கள் மேலே ஏற வேண்டாம்.

காவல்துறையின் அறிவுறுத்தலின் படி, அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும். தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு வருபவர்கள் பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ, நடந்து கொள்ளவோ கூடாது.சாலையின் இருபுறமும் பிளக்ஸ் பேனர்கள், அலங்கார வளைவுகள், கொடி கட்டப்பட்ட கம்பிகளை உரிய அனுமதியின்றி வைக்கக்கூடாது.

விஜயின் வருகையின்போது பட்டாசு வெடிப்பதை தோழர்கள் தவிர்க்குமாறும் தவெக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் காவல்துறையின் விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் எனவும் தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

Related News

Latest News