தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்றுசென்னை பனையூரில் உள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில், பெரியார் சிலைக்கு த.வெ.க. தலைவர் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து வருகின்ற சனிக்கிழமை { செப் 20 } ஆம் தேதி நாகை,திருவாரூர் மாவட்டங்களில் த.வெ.க தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் செல்லும் நிலையில் கட்சியின் நாகை,திருவாரூர் மாவட்ட செயலாளர்களுடன் பனையூரில் உள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதாவது, எத்தனை மணிக்கு, எந்த இடத்தில் உரையாற்றுவது, தொண்டர்கள் கூட்டத்தை கையாள்வது குறித்து ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
