தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பெரியாரின் சிலைக்கு மற்றும் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று பெரியாருக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கொள்கை தலைவர்களுள் ஒருவர் பெரியார் ஆவார், பெரியாருக்கு மரியாதையை செலுத்தும் வகையில் சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக அலுவலகத்தில் நிறுவப்பட்டிருக்கும் பெரியாரின் சிலைக்கு தலைவர் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும்,எக்ஸ் தளத்தில் தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள,”பதிவில்பெண்கள் முன்னேற்றம், சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனை,சமூக சீர்திருத்தக்கொள்கை, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் போன்ற சீர்திருத்த சிந்தனைகள் வாயிலாக நம் மக்களுக்காக உழைத்த எம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்ததினமான இன்று சென்னை பனையூரில் உள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்” என்று தெரிவித்துள்ளார்.
