Thursday, October 2, 2025

த.வெ.க. தலைமை அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்!!

2026 க்கான தேர்தல் முன்னிட்டு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளார் விஜய். அந்த வகையில் 3-ம் கட்டமாக கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் செய்த நிலையில், பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இந்த கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து கரூர் துயரம் குறித்து விளக்கம் அளித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் 5 நிமிட வீடியோ வெளியிட்டார்.

இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம் நடைபெற்றது. விஜயின் பிரச்சாரப் பேருந்து, பிரச்சார வேன் போன்றவற்றைக்கு ஆயுத பூஜை நடத்தி வழிபாடு செய்யப்பட்டுள்ளது.

விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், தபோது ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News