மாதத்தின் முதல் நாளே இனிப்பான நியூஸ்; கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.

அதன் படி, வீட்டு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலை, ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதி அன்றும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நவம்பர் மாத முதல் நாளான இன்று சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 4 ரூபாய் 50 காசுகள் குறைத்துள்ளது.

அதாவது, 1,754 ரூபாயாக இருந்த வணிக சிலிண்டர் விலை, தற்போது 1750 ரூபாயாக குறைந்துள்ளது.

எனினும் வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.868.50 என்ற பழைய விலையிலேயே இருக்கிறது.

Related News

Latest News