Saturday, April 19, 2025

“இந்த பத்திரிகைகாரங்களே ரொம்ப திமிர் பிடிச்சவங்கபா” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எஸ்.வி சேகர்

பிரபல நகைச்சுவை நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு 1 மாத சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்நிலையில் கடந்த 27-ந்தேதியன்று நாரதகான சபா நடைபெற்றது.

அந்த நாடகத்தில் பெண் பத்திரிகையாளரை உட்காருங்க என்று அவர் சொல்கிறார். அதற்கு அந்த பெண் பத்திரிகையாளர் நாற்காலி எதுவும் இல்லையே நான் எப்படி உட்காருவது என்று கேட்கிறார்.

அப்போது அவர் தன் தொடையை காண்பித்து எவ்வளவு இடம் இருக்கிறது. இந்த பத்திரிகைகாரங்களே ரொம்ப திமிர் பிடிச்சவங்கபா… இவ்வளவு இடம் இருக்கே… இங்கே உட்கார கூடாதா? என பேசியுள்ளார்.

அவருடைய இந்த வசனங்கள் பெண் பத்திரிகையாளர்களே ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் சித்தரிக்கும் வகையில் உள்ளது என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Latest news