காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை அருகே சாலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கங்காதரன் (36). இவருடைய மனைவி நந்தினி (29). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 12 வருடங்கள் ஆகிய நிலையில் 9 மற்றும் 7 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கங்காதரன் ஈச்சர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இச்சூழலில் கங்காதரன் தன் மனைவி நந்தினியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கங்காதரன் குடிபோதையில் இருந்துள்ளார். இச்சூழலில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகராறு முற்றி இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கங்காதரன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து நந்தினியின் கழுத்தை கரகரவென அறுத்துள்ளார். இதில் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் மிதந்து நந்தினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உடனே தகவல் அறிந்து விரைந்து சென்ற மணிமங்கலம் காவல்துறையினர் நந்தினியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கங்காதரனை கைது செய்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
