Thursday, April 24, 2025

ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? – செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜாமீனில் வெளியே வந்தார். உடனடியாக அவருக்கு மின் துறை அமைச்சர் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டது.

செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜமீனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜாமீன் வழங்கிய போது அமைச்சராக பதவியேற்க அனுமதி வழங்கவில்லை என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Latest news