Thursday, May 22, 2025

அமலாக்கத்துறையை கண்டித்த உச்சநீதிமன்றம் : விளக்கமளித்த எல்.முருகன்

கடந்த மாதம் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டியது.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை எல்லை மீறியுள்ளதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் டாஸ்மாக் வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு தடை விதித்தது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியதாவது : அமலாக்கத் துறையின் சோதனைக்கும், மத்திய அரசுக்கும் தொடர்பில்லை. எங்கு தவறு நடந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு அமலாக்கத் துறை விசாரிக்கிறது. தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் என கூறியுள்ளார்.

Latest news