கடந்த மாதம் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டியது.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை எல்லை மீறியுள்ளதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் டாஸ்மாக் வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.