புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டசபை தொகு திகளுக்கு வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது. மே 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி மார்க்கெட் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், அங்கிருந்த தொண்டர்கள் சிலர் விஜய்யின் வாகனத்தின் மீது ஏறி அட்டகாசம் செய்துள்ளனர். விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்த சில ரசிகர்கள் விபத்தில் சிக்கினர். இதில் சிலர் காயம் அடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
