Thursday, July 31, 2025

சூப்பர்ஸ்டார் பிறந்தநாளன்று சோகத்தில் மூழ்கிய ரஜினி ரசிகர்கள்!

சாதாரண கண்டெக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த் தனக்கே உரிய தனித்துவமான ஸ்டைல், யதார்த்தமான நடிப்பு மற்றும் மக்களின் மனங்களை கவரும் அணுகுமுறையால் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக உயர்ந்து இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் ரஜினிகாந்த்.

இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் சூப்பர்ஸ்டாரின் மனைவி லதா ரஜினிகாந்த் ரசிகர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் பாடல் பாடி, கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

இதற்கிடையே, ரஜினியின் போயஸ்  தோட்ட இல்லத்தின் முன் ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்க, கொட்டும் மழையிலும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் கூடினர்.

அப்போது லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்த் அவர்கள் ஊரில் இல்லை  எனவும்மழையில் யாரும் காத்திருக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். வருடந்தோறும் பிறந்தநாளன்று ரஜினியை அவரின் இல்லத்தில் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கும் ரசிகர்களுக்கு, இந்த தகவல் ஏமாற்றதை அளித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News