கர்நாடகாவில் காவல் துறை அதிகாரியாக இருந்த அண்ணாமலை கடந்த 2021ம் ஆண்டில் தமிழக பாஜகவின் மாநில தலைவராக பொறுப்பேற்றார். பாஜக சார்பில் அண்ணாமலை 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியிலும், 2024ம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தலில் கோயம்புத்தூர் மக்களவை தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதைத் தொடர்ந்து 2025, ஏப்ரல் 12ம்தேதி பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். இதனால் அண்ணாமலைக்கு மாநில அளவில் அல்லது தேசிய அளவிலான முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு தமிழக பாஜக வட்டாரத்தில் எழுந்தது.
இந்நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சேலத்தில் ரசிகர் மன்றம் துவங்கப்பட்டுள்ளது. ரசிகர் மன்ற பதாகையின் மேல்புறம், “நேர்மை, புரட்சி, எழுச்சி” ஆகிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டின் அரசியலில் சூப்பர் ஸ்டார் K.அண்ணாமலை Ex.IPS, ரசிகர் மன்றம், ஆணைப்பள்ளம், பக்கநாடு என்றும், ரசிகர் மன்றத்தின் தலைவர் A.T.தங்கமணி, இயக்குநர் மற்றும் ரசிகர் மன்றத்தின் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகள் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.